Five Important Worships : ஆடி மாதம் கட்டாயம் வழிபட வேண்டிய ஐந்து முக்கியமான வழிபாடுகள்!
Aug 06, 2023, 03:34 PM IST
ஆடி மாத சிறப்புகளும் ஆடி மாதம் கட்டாயம் நம் செய்ய வேண்டிய ஐந்து வழிபாடுகளையும் பற்றியும் இதில் தெரிந்து கொள்வோம்.
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்கு சென்று வருவது நல்லது. எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். அதுவும் ஆடிமாதம் குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களை தரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் மஞ்சள் உப்பு வாங்கி வந்து வைத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
சமீபத்திய புகைப்படம்
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட்டு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வருடம் முழுவதும் வரும் அமாவாசைகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்வில் முன்னோர்களின் ஆசிர்வாசம் கிடைக்கும். இது பெண்கள் செய்யக்கூடாது.
ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்கள் நற்கதி அடைவதற்காக மட்டுமல்ல. யார் ஒருவர் அமாவாசை அமாவாசை தோறும் விரதம் இருந்து முன்னோர் வழிபாடு செய்து, தர்ப்பணம் கொடுக்கிறார்களோ, அதன் பலன் அவர்களின் பிள்ளைகளை போய் சேரும். அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமைய அது வழி செய்யும்.
அவ்வை விரதம்
அவ்வையார் நோன்பின் சிறப்புகளில் மிகவும் முக்கியமானது இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே செய்யும் நோன்பாகும். பெண்கள் செய்யும் வரலட்சுமி விரத பூஜையில் ஆண்கள் கலந்து கொள்வார்கள். இந்த அவ்வையார் நோன்பு எந்த ஆணுடைய கண்ணிலும் படாதவாறு பெண்கள் தனியே இந்த நோன்பை மேற்கொள்வார்கள். இளம் பெண்கள் முதல் வயதான சுமங்கலிகள் வரை ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து பெண்களும் ஒன்று கூடி இந்த விரதம் இருந்து நோன்பை மேற்கொள்வார்கள்.
சுமங்கலி பெண்ணின் தலைமையில் இந்த நோன்பு நடத்தப்படும். நோன்பு படைபதற்கான கொழுக்கட்டைக்கு, அரிசியை தனியாக ஊறவைத்து, காய வைத்து மாவாக அரைத்து தனியாக வைத்திருப்பார்கள். அதை உப்பு சேர்க்காமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து வழிபடுவார்கள். திருமணம் ஆக நோன்பிருக்கும் இளம் பெண்கள் தங்கள் மனதுக்கு பிடித்த ஆணின் உருவத்தை கொழுக்கட்டையாக பிடித்து வழிபடுவார்கள்.
ஆடிப்பூரம்
ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
ஆடிப்பெருக்கு
தமிழ் மாதங்களில் ஆடி சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக அந்த 18 படிகளும் மூழ்கிவிடும். அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. பெண்கள் ஒன்று கூடி ஆற்றங்கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி மஞ்சள் ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிபடுகள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்