இது ஒரு அரசியல் அணுகுண்டு. மக்களோடு மக்களாக நாம் இனிமேல் தொடர்ந்து நிற்கப் போகிறோம். தமிழ்நாட்டில் ஒரு வீடு கூட விடாமல், அவர்களுக்கு உண்மையாக உயிராக, உறவாக நாம் இருப்போம்.
By Kalyani Pandiyan S Oct 28, 2024
Hindustan Times Tamil
அவர்களுடைய ஆசீர்வாதத்தாலும், அமோகமான ஆதரவாலும் நம்மை சிங்கிள் மெஜாரிட்டியோடு அவர்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான நம்பிக்கை, நமக்கு 100% இருக்கிறது.
இருந்தாலும், அந்த நிலையை நிறைவாக நாம் அடைந்தாலும், நம்மை நம்பி நம்மோடு சிலர் வரலாம் இல்லையா..? அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா…? அப்படி வருகிறவர்களையும் நாம் அன்போடு அரவணைக்க வேண்டும் இல்லையா... ?
நம்மை நம்பி வருகிறவர்களை நமக்கு அரவணைத்து தானே பழக்கம். அதனால், நம்மை நம்பி நம்மோடு களம் காண வருகிறவர்களுக்கும், ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு செய்யப்படும்
2026 ஆம் ஆண்டு அரசியல் களத்தின் புத்தாண்டு…தன்னம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றியின் நிச்சயம்
அரசியலில் நம்முடைய நிலைப்பாடு என்பதுதான் இங்கு மிக மிக முக்கியமானது. அதுதான் நம்முடைய எதிரிகள் யார் என்று நமக்குச் சொல்லும்.
நாம் சரியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டாலே நம்முடைய எதிரிகள் யார் என்று நாம் சொல்லத் தேவையில்லை. அவர்களே நம் கண் முன்னே வந்து நின்று விடுவார்கள். நம்மை எதிர்க்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.
எதிரிகள் இல்லாத வெற்றி வேண்டுமென்றால் நமக்கு சாத்தியப்படலாம். ஆனால் களம் என்பது அப்படி இருக்காது. ஆனால், களத்தில் நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது நம்முடைய எதிரிகள் தான். மாநாட்டில் விஜய் பேச்சு!
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்