அப்பப்பா! எண்ணிப் பார்க்க முடியாத அளவு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பிரியாணி இலைகள்!

By Priyadarshini R
Oct 12, 2024

Hindustan Times
Tamil

உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்ற அச்சம் உள்ளதா அல்லது நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? எனில் இந்த இலைகளை உட்கொள்வது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். 

பிரியாணி இலைகள், உங்கள் குடலில் வாயுத்தொல்லைகள் மற்றும் பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது.

பிரியாணி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எசன்சியல் எண்ணெய், சுவாசம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை தீர்க்க உதவுகிது. இதில் இருந்து எசன்சியல் ஆயில் பெறப்படுகிறது. ‘

பிரியாணி இலையில் பூஞ்ஜை தொற்றுகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலில் பூஞ்ஜை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. 

நீங்கள் மனஅழுத்தத்தால் உழன்று கொண்டிருந்தீர்கள் என்றால், அது பிரியாணி இலைகளில் உள்ள லினாலூலால் தீர்க்கப்படுகிறது.

குறைந்த செலவில் உலகச் சுற்றுலா போக வேண்டுமா?