MHC: சட்டவிரோத ஆயுத பயன்பாடு வழக்கு - நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: சட்டவிரோத ஆயுத பயன்பாடு வழக்கு - நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

MHC: சட்டவிரோத ஆயுத பயன்பாடு வழக்கு - நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 17, 2022 04:46 PM IST

சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது.இதை தடுக்க வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை எனக் கூறி சென்னை,திருச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சட்டவிரோத ஆயத பயன்பாடு வழக்கில் குறைபாடு இல்லாமல் முழுமையாக விரைவில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத ஆயத பயன்பாடு வழக்கில் குறைபாடு இல்லாமல் முழுமையாக விரைவில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

இவர்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூரில் முன்னணி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்குகளை தமிழக போலீஸார் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை.

எனவே, சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுத வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. இதை தடுக்க வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை.

ஆயுத உரிமம் வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரின் முன்நடத்தை, அவர் மீது வழக்குகள் இருப்பின் அதை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்ப்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. உரிமம் பெறாத ஆயுதங்கள் பயன்பாட்டை முழுமையாக தடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் விசாரணை அலுவலர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை முறையாக நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையும் திருப்திகரமாக உள்ளது.

இதனால் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழக போலீசார் சட்டவிரோத ஆயுத வழக்குகளின் விசாரணையை குறைபாடு இல்லாமல் முழுமையாக விரைவில் விசாரிக்க வேண்டும்.

விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருந்து சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.